தெனியாய பரீட்சை நிலையத்தில் தமிழ் மாணவர்கள் அசௌகரியம்

தெனியாய பரீட்சை நிலையத்தில் தமிழ் மாணவர்கள் அசௌகரியம்

தெனியாய பரீட்சை நிலையத்தில் தமிழ் மாணவர்கள் அசௌகரியம்

எழுத்தாளர் Staff Writer

17 Aug, 2014 | 8:20 pm

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை இன்று நடைபெற்றது.

இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமான புலமைப்பரிசில் பரிட்சை நண்பகல் 12 மணிக்கு நிறைவு பெற்றது.

இந்த நிலையில் தெனியாய கல்வி வலயத்திலுள்ள 4 தமிழ் மொழிமூல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் தெனியாய ராஜபக்ச மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த மத்திய நிலையத்தில் பரீட்சைக்கு தோற்றினர்.

எவ்வாறாயினும் இந்த மத்திய நிலையத்தில் தமிழ் மேற்பார்வை உத்தியோகத்தர்கள் இன்மையால் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டதாக அவர்களது பெற்றோர் குற்றம் சுமத்துகின்றனர்.

தெனியாய பெவர்லி தமிழ் கனிஷ்ட வித்தியாலயம், என்சல்வத்த தமிழ் கனிஷ்ட வித்தியாலயம், அனில்கந்த தமிழ் கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் ஏன்போர்ட் தமிழ் வித்தியாலயம் ஆகியவற்றை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு அசௌகரியத்தை எதிர்நோக்கியிருந்தனர்.

பரீட்சை மத்திய நிலையத்தின் இரண்டாம் இலக்க அறையில் இந்த மாணவர்கள் பரீட்சையில் தோற்றியுள்ளதாகவும், அந்த பரீட்சை நிலையத்தில் தமிழ் மொழிமூலமான மேற்பார்வை உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கவில்லை எனவும் பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பெற்றோரின் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டு வினவியபோது இந்த விடயம் தொடர்பான முறைப்பாடு இதுவரை கிடைக்கவில்லை என பதிலளித்தார்.

தமிழ் மொழிமூல மாணவர்கள் பரீ்ட்சைக்கு தோற்றும் மத்திய நிலையங்களில் தமிழ் மொழியை பேசக்கூடிய மேற்பார்வையாளர்களை கடமையில் ஈடுபடுத்துமாறு ஏற்கனவே அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தாகவும் அவர் தெரிவித்தார்

இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதாகவும் பரீட்சைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரி குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்