தாதியர் பயிற்சி நிலையத்தில் யுவதிகள் பாலியல் துஷ்பிரயோகம்

தாதியர் பயிற்சி நிலையத்தில் யுவதிகள் பாலியல் துஷ்பிரயோகம்

தாதியர் பயிற்சி நிலையத்தில் யுவதிகள் பாலியல் துஷ்பிரயோகம்

எழுத்தாளர் Staff Writer

17 Aug, 2014 | 4:54 pm

பொலன்னறுவை நகரிலுள்ள தனியார் தாதியர் பயிற்சி நிலையமொன்றில் பயிற்சி பெற்றுவரும் இரண்டு யுவதிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாதியர் பயிற்சி நிலையத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பயிற்சி நிலையத்தின் பணிப்பாளர் தம்மை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பாதிக்கப்பட்ட இரண்டு யுவதிகளும் வாக்குமூலமளித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் அரச தாதி சேவையில் இருந்து ஓய்வுபெற்ற ஒருவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்