தம்புளையில் வாகன விபத்து; ஒருவர் பலி,28 பேர் காயம்

தம்புளையில் வாகன விபத்து; ஒருவர் பலி,28 பேர் காயம்

தம்புளையில் வாகன விபத்து; ஒருவர் பலி,28 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

17 Aug, 2014 | 1:31 pm

தம்புளை இனாமுலுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் காயமடைந்துள்ளனர்.

இராணுவ டிரக் வண்டி ஒன்று தனியார் பஸ் ஒன்றுடன் மோதி இன்று காலை விபத்து இடம்பெற்றுள்ளது.

புலமைமைபரிசில் பரீட்சைக்கு சென்ற மாணவன் உள்ளிட்ட 15 பெண்களும், மூன்று சிறார்களும், இராணுவ வீரர்கள் மூவரும் காயமடைந்தவர்களில் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் தம்புளை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, விபத்தில் காயமடைந்த மாணவனுக்கு வைத்தியசாலையிலேயே பரீட்சை எழுதுவதற்கான அனுமதியை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வழங்கியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்