கொழும்பு மாநகரிலுள்ள அனைத்து திரையரங்குகளையும் சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை

கொழும்பு மாநகரிலுள்ள அனைத்து திரையரங்குகளையும் சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை

கொழும்பு மாநகரிலுள்ள அனைத்து திரையரங்குகளையும் சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

17 Aug, 2014 | 7:29 pm

கொழும்பு மாநகரில் உள்ள அனைத்து திரையரங்குகளையும்  நாளை முதல் சோதனைக்கு உட்படுத்தவுள்ளதாக கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.

திரையரங்குகளிலுள்ள சுகாதார வசதிகள், கழிவறைக் கட்டமைப்பு மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பில் இதன்போது கவனத்திற்கொள்ளப்படவுள்ளதாக மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

உரிய வசதிகள் இல்லாத திரையரங்குகளுக்கு எதிர்காலத்தில் அனுமதிப் பத்திரங்களை வழங்காதிருக்கவும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை மீளப்பெறவும் நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்