குருக்கள் மடம் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் நாளை ஆரம்பம்

குருக்கள் மடம் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் நாளை ஆரம்பம்

குருக்கள் மடம் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் நாளை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

17 Aug, 2014 | 10:36 am

மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் காணப்படுவதாக கூறப்படும் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன.

நீதிமன்ற உத்தரவிற்கமைய அகழ்வுப் பணிகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போனோர்  தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பிரதிநிதி ஒருவரும் மனித புதைகுழியின் அகழ்வு பணிகளை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ குணதாச  குறிப்பிட்டார்.

ஆணைக்குழுவின் பகிரங்க விசாரணைகள் காத்தான்குடியில் அண்மையில் இடம்பெற்றப் போது மனித புதைக்குழி தொடர்பான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டது.

கிடைத்த முறைப்பாட்டின் உண்மைத் தன்மையை உறுதி செய்யும் நோக்கிலே தமது பிரதிநிதி  அகழ்வுப் பணிகளில் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்