இரத்மலானையில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை

இரத்மலானையில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை

இரத்மலானையில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை

எழுத்தாளர் Staff Writer

17 Aug, 2014 | 4:44 pm

இரத்மலானை தெலவல வீதியிலுள்ள சிகை அலங்கார நிலையமொன்றில் வைத்து இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் ஒரு மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதன் பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இரத்மலானை தெலவில பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஒருவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்

சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெல்லம்பிட்டி சிங்கபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 16 வயது சிறுவன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த சிறுவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்