வைத்தியர் மரணம்;  பம்பலப்பிட்டி அழகுக்கலை சிகிச்சை நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தம்

வைத்தியர் மரணம்; பம்பலப்பிட்டி அழகுக்கலை சிகிச்சை நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தம்

வைத்தியர் மரணம்; பம்பலப்பிட்டி அழகுக்கலை சிகிச்சை நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

16 Aug, 2014 | 10:15 am

பெண் வைத்தியர் ஒருவரின் மரணம் நிகழ்ந்த பம்பலப்பிட்டி அழகுக்கலை சிகிச்சை நிலையத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

மரணம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை அந்த அழகுக்கலை சிகிச்சை நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய ஔடதங்கள் அதிகார சபையின் பணிப்பாளர் டொக்டர் அமல் ஹர்ஷ டி சில்வா குறிப்பிடுகின்றார்.

குற்றச்செயல் இடம்பெற்ற ஓரிடமாகக் கருதி விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமையே அந்த நிலையத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்துவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

குறிப்பிட்ட அழக்குக்கலை சிகிச்சை நிலையம் தொடர்பில் பல்வேறு பிரிவுகளினாலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஔடதங்கள் அதிகார சபையின் பணிப்பாளர் கூறினார்.

இதேவேளை, இதுகுறித்து கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அழகுக்கலை சிகிச்சை நிலையம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அங்கிருந்து பெருமளவு காலாவதியான மருந்துப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்