புஸ்ஸல்லாவை தங்க நகை திருட்டு சம்பவம்; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

புஸ்ஸல்லாவை தங்க நகை திருட்டு சம்பவம்; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

புஸ்ஸல்லாவை தங்க நகை திருட்டு சம்பவம்; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

16 Aug, 2014 | 4:44 pm

புஸ்ஸல்லாவை மெல்பர்ன் தோட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற தங்க நகை திருட்டு சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கம்பளை நீதவான் முன்னிலையில் இன்’று முற்பகல் ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மெல்பர்ன் தோட்டத்தை சேர்ந்த ஒருவரே நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் சந்தேகநபரால் திருடப்பட்ட 75,000 ரூபா பெறுமதியான தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் புஸ்ஸல்லாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்