நுவரெலியாவில் விபத்து ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில்

நுவரெலியாவில் விபத்து ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில்

நுவரெலியாவில் விபத்து ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில்

எழுத்தாளர் Staff Writer

16 Aug, 2014 | 2:00 pm

நுவரெலியாவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னால் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றின் மீது மோட்டார் சைக்கிள் மோதியிருப்பதுடன், அதற்குப் பின்னால் பயணித்த பஜீரோ ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

இந்த விபத்து நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் நுவரெலியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் மூன்று வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்