சாதனை பட்டியலில் இணைந்தார் ஹேரத்

சாதனை பட்டியலில் இணைந்தார் ஹேரத்

சாதனை பட்டியலில் இணைந்தார் ஹேரத்

எழுத்தாளர் Staff Writer

16 Aug, 2014 | 3:45 pm

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்  இன்னிங்ஸ் ஒன்றில்  9 விக்கட்டுக்களை வீழ்த்தி சாதனை நிலைநாட்டிய வீரர்களின் வரிசையில்  இலங்கையின் ரங்கன ஹேரத் இணைந்து கொண்டுள்ளார்.

இலங்கை சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு பின்னர்  இன்னிங்ஸ் ஒன்றில்  9 விக்கட்டுக்களை வீழ்த்திய இரண்டாவது இலங்கை வீரர் என்ற சாதனையை ரங்கன ஹேரத்  நிலைநாட்டியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஹேரத் சர்வதேச ரீதியில் 9 விக்கட்டுக்களை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இவர் 17 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

கொழும்பு எஸ் எஸ் சி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியின்  மூன்றாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 332 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் ஷப்ராஸ் அஹ்மட் 103 ஓட்டங்களையும் அஹ்மட் செஷாட் 58 ஓட்டங்களையும் பெற்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்