சக்தி ஜூனியர் சூப்பர்ஸ்டார் மாபெரும் இறுதிப் போட்டி ஆரம்பம்

சக்தி ஜூனியர் சூப்பர்ஸ்டார் மாபெரும் இறுதிப் போட்டி ஆரம்பம்

சக்தி ஜூனியர் சூப்பர்ஸ்டார் மாபெரும் இறுதிப் போட்டி ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

16 Aug, 2014 | 6:34 pm

சக்தி ஜுனியர் சூப்பர் ஸ்டாராக சீசன் 3 இன் பிரமாண்டமான இறுதிப் போட்டி இரத்மலானை ஸ்டைய்ன் கலையகத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.

நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான போட்டியாளர்கள் இம்முறை சக்தி ஜுனியர் சூப்பர்ஸ்டார் போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்திய நான்கு சிறுவர்கள் இன்று நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்தில் இன்று மாலை ஆரம்பமான பிரம்மான்டமான இறுதிப் போட்டியில்  பண்டாரவளையைச் சேர்ந்த கண்ணதாசன் இந்திரஜித்,  வௌ்ளவத்தையைச் சேர்ந்த அமர்நாத் அம்ரித்தா,  தெஹிவளையைச் சேர்ந்த யோகராஜன் வைஷாலி மற்றும் நாவலப்பிட்டியைச்  சேர்ந்த சந்திரசேகரன் ரதுஷா ஆகியோர் தமது திறமையை வெளிப்படுத்தினர்

சக்தி ஜுனியர் சூப்பர் ஸ்டார் இறுதிப் போட்டி சக்தி ரிவியில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்