சக்தி ஜுனியர் சூப்பர் ஸ்டாரானார் யோகராஜன் வைஷாலி

சக்தி ஜுனியர் சூப்பர் ஸ்டாரானார் யோகராஜன் வைஷாலி

எழுத்தாளர் Bella Dalima

16 Aug, 2014 | 8:13 pm

சக்தி ஜுனியர் சூப்பர் ஸ்டாராக ​தெஹிவளையைச் சேர்ந்த யோகராஜன் வைஷாலி மகுடம் சூடிக்கொண்டார்.

சக்தி ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 3 இன் பிரமாண்டமான இறுதிப் போட்டி இரத்மலானை ஸ்டைய்ன் கலையகத்தில் இன்று மாலை நடைபெற்றது.

பலத்த போட்டிக்கு மத்தியில் சக்தி ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 3 இன் மகுடத்தை  வைஷாலி சூடிக்கொண்டார்.

இந்தப் போட்டியின் இரண்டாம் இடத்தை பண்டாரவளையைச் சேர்ந்த கண்ணதாசன் இந்திரஜித்தும் மூன்றாம் இடத்தை வெள்ளவத்தையைச் சேர்ந்த அம்ரித்தாவும் தனதாக்கிக் கொண்டனர்.

செல்லமாய் ஒரு குரலைத் தேடும் முயற்சியில் சக்தி ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 3 ஆரம்பமானது.

இதற்கான மகுடத்தை சூடிக்கொள்ளும் எதிர்பார்ப்பில் ஆயிரக்கணக்கான போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

இவர்களில் பல சுற்றுக்களைக் கடந்து இறுதிப் போட்டிக்கு பண்டாரவளையைச் சேர்ந்த கண்ணதாசன் இந்திரஜித், வௌ்ளவத்தையைச் சேர்ந்த அமர்நாத் அம்ரித்தா,தெஹிவளையைச் சேர்ந்த யோகராஜன் வைஷாலி , நாவலப்பிட்டியவைச் சேர்ந்த சந்திரசேகரன் ரதுஷா ஆகியோர் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தனர்.

இதற்கமைய இரத்மலானை ஸ்டைய்ன் கலையகத்தில் இன்று மாலை நடைபெற்ற பிரமாண்டமான இறுதிப் போட்டியில் இரசிகர்களின் பலத்த வரவேற்புக்கு மத்தியில் நான்கு போட்டியாளர்களும் தமது ஆற்றலை வெளிப்படுத்தினர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்