விடுதலையான தமிழக மீனவர்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்

விடுதலையான தமிழக மீனவர்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்

விடுதலையான தமிழக மீனவர்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

16 Aug, 2014 | 9:27 am

இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட 94 இந்திய மீனவர்களும்  அந்நாட்டு அதிகாரிகளிடம் இன்று ஒப்படைக்கப்படவுள்ளனர்.

காங்கேசன்துறை மற்றும் தலைமன்னார் கடற்பரப்பில் இந்திய மீனவர்களை இன்று மாலை இந்திய கடலோர காவற்படையினரிடம் ஒப்படைக்கவுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் லால் டி சில்வா தெரிவித்தார்.

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யமாறு  ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்த பணிப்புரைக்கு அமைய கடந்த இரண்டு நாட்களாக, இந்திய மீனவர்கள் கட்டம் கட்டமாக நீதிமன்றங்களினால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை, இந்தியாவில் விடுதலை செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 16 பேரும் அடுத்த வாரம் நாட்டிற்கு வரவழைக்கப்படவுள்ளனர்.

இதனை தவிர இந்தியாவில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 23 பேரையும் விடுதலை செய்வதற்கான பேச்சுவார்த்தையில் கடற்றொழில் திணைக்களம் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்