தமிழக மீனவர்கள் இரண்டாவது நாளாகவும் வேலை நிறுத்தப் போராட்டம்

தமிழக மீனவர்கள் இரண்டாவது நாளாகவும் வேலை நிறுத்தப் போராட்டம்

தமிழக மீனவர்கள் இரண்டாவது நாளாகவும் வேலை நிறுத்தப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

16 Aug, 2014 | 7:00 pm

இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள  தமிழக  மீனவர்களின் படகுகளை விடுவிக்குமாறு கோரி புதுக்ககோட்டை மாவட்ட மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாகவும் வேலை நிறுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்

இதனிடையே கடந்த ஜூலை மாதம் 24 ஆம் திகதி  தமிழக மீனவர்கள் ஆரம்பித்த வேலை நிறுத்தப் போராட்டமும் தொடர்வதாக தமிழக கரையோரா விசைப்படகு மீனவர் நலச் சங்கத் தலைவர் என். தேவதாசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமது மீனவர்கள் அனைவரம் விடுதலை செய்யப்பட்டமை மகிழ்ச்சி அளிக்கின்ற போதிலும், மீனவர்களின்  படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும் என அவர் கூறுகின்றார்.

இதேவேளை, இந்தியாவின் மத்திய இணை அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணணுக்கும் தமிழகத்திலுள்ள மீனவர் பிரதிநிதிகளுக்கும் இடையே இன்று காலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சென்னையிலுள்ள பாரதீய ஜனதாக் கட்சி தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இதன்போது மத்திய இணை அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் மீனவர் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்

இருநாட்டு மீனவர்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான  தீர்மானங்களும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும்  மத்திய இணை அமைச்சர் வாக்குறுதி அளித்ததாக தமிழக கரையோர விசைப்படகு மீனவர் நலச் சங்கத் தலைவர் என் தேவதாசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்