அரிசி விலை தொடர்பில் நுகர்வோர் குற்றச்சாட்டு

அரிசி விலை தொடர்பில் நுகர்வோர் குற்றச்சாட்டு

அரிசி விலை தொடர்பில் நுகர்வோர் குற்றச்சாட்டு

எழுத்தாளர் Staff Writer

16 Aug, 2014 | 12:15 pm

நிர்ணய விலையைவிட வர்த்தகர்கள் அதிக விலையில் அரிசி விற்பனையில் ஈடுபடுவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சில பிரதேசங்களில் வர்த்தகர்கள் தங்கயின் சுயவிருப்பின் பிரகாரம் அதிக விலையில் அசிரியை விற்பனை செய்வதாக நுகர்வோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதன் காரணமாக பெரும் சிரமங்களுக்கு உள்ளாக நேரிட்டுள்ளதாகவும் நுகர்வோர் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி நள்ளிரவு முதல் அரிசி வகைகளுக்கு அரசாங்கம் விலை நிர்ணயம் மேற்கொண்டிருந்தது.

இதற்கமைய கல், மண் நீக்கப்பட்ட ஒருகிலோகிராம் சம்பா அரிசியின் சில்லறை விலை 77 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.

ஒருகிலோகிராம் நாட்டுப் பச்சையரிசி 68 ரூபாவாகவும், சிவப்பு நாட்டரிசி மற்றும் வெள்ளைப் பச்சையரிசி என்பன 66 ரூபாவாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டது.

சிவப்பு பச்சையரிசி ஒரு கிலோகிராமின் விலை 60 ரூபாவாக விதிக்கப்பட்டிருந்தது.

ஆயினும், இந்த நிர்ணய விலைகளைவிட அதிக விலையில் வர்த்தகர்கள் அசிரி விற்பனையில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என நுகர்வோர் மற்றும் விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டாளர் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஜே.ஏ.எம். டக்ளஸிடம் வினவியபோது, நிர்ணய விலையைவிட கூடுதல் விலையில் அரிசி விற்பனையில் ஈடுபடுகின்ற வர்த்தகர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் நாடு பூராகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இத்தகைய வர்த்தகர்கள் தொடர்பில் 0771 088 922 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறைப்பாட்டை முன்வைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்