வன்முறையை கைவிட்டு சகோதரத்துவத்தை கடைபிடிக்க வேண்டும்- மோடி

வன்முறையை கைவிட்டு சகோதரத்துவத்தை கடைபிடிக்க வேண்டும்- மோடி

வன்முறையை கைவிட்டு சகோதரத்துவத்தை கடைபிடிக்க வேண்டும்- மோடி

எழுத்தாளர் Staff Writer

15 Aug, 2014 | 7:53 pm

அனைவரம் கவனமும்  இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் முதலாவது சுதந்திர தின உரை மீது இன்று திரும்பியிருந்தது.

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி பிரித்தானிய காலத்துவத்திலிருந்து விடுதலை பெற்ற இந்தியா இன்று 68 ஆவது சுந்திர தினத்தை கொண்டாடுகின்றது.

17 ஆம் நூற்றாண்டுக்குரிய டெல்லி செங்கோட்டையில் பல்லாயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் முன்னிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது சுந்திர தின உரையை நிகழ்த்தினார்.

இன்றைய சுந்திர தினத்தினை முன்னிட்டு தலைநகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட துருப்பினர்கள் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அமர்த்தப்பட்டிருந்தனர்.

குண்டு துளைக்காத கண்ணாடி பெட்டியின்றி அதேபோன்று எழுத்தேடுகளும் இல்லாது இயல்பாக இன்றைய உரையை நரேந்திர மோடி ஆற்றியமை சிறப்பம்சமாகும்.

நாட்டின் வளர்ச்சியை புதிய உயரத்துக்கு எடுத்துச் செல்ல உறுதியெடுப்பதற்கும் இந்தியா சுதந்திரம் அடைய தம்மை தியாகம் செய்த அனைவருக்கும்  மரியாதை செலுத்தும் நாள் இதுவென்றும் தனது உரையில் மோடி  தெரிவித்தார்.

வன்முறையை கைவிட்டு சகோதரத்துவத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் இன்றைய சுதந்திர தின நிகழ்வில் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்