வட்டவளையில் 75 அடி பள்ளத்தில் வீழ்ந்தது லொறி; இருவர் காயம்

வட்டவளையில் 75 அடி பள்ளத்தில் வீழ்ந்தது லொறி; இருவர் காயம்

வட்டவளையில் 75 அடி பள்ளத்தில் வீழ்ந்தது லொறி; இருவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

15 Aug, 2014 | 11:21 am

ஹட்டன், வட்டவளை பகுதியில் லொறியொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று காலை 6.10 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவிசாவளையில் இருந்து டயகம நோக்கி தொழிற்சாலை ஒன்றிற்கு பொருட்களை ஏற்றிச்சென்ற லொறியொன்று சுமார் 75 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த விபத்தில் காயமடைந்த லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் இருவரும் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்