யாழில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வருக்கு விளக்கமறியல்

யாழில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வருக்கு விளக்கமறியல்

யாழில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வருக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

15 Aug, 2014 | 2:44 pm

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு மற்றும் சமூக விரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய கும்பலொன்றைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்திய பின்னர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மானிப்பாயை மையமாகக்கொண்டு இயங்கிவரும் இந்த குழுவைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களும் நேற்று அதிகாலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதாக பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

சந்தேகத்திற்கிடமான சிலர் வாள்களுடன் நிற்பதை இதன்போது அவதானித்த பொலிஸார், மேலதிக பொலிஸாரின் உதவியுடன் நான்கு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்கள் தப்பியோட முற்பட்டதை அடுத்து காலுக்கு கீழே துப்பாக்கிச் சூடு நடத்தி நான்கு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்கள், வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்களில் சிலர் தப்பியோடியதாகவும், அவர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருந்த ஆவா என்ற குழுவின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் பலர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்