மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா இன்று

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா இன்று

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா இன்று

எழுத்தாளர் Staff Writer

15 Aug, 2014 | 11:08 am

வரலாற்று சிறப்புமிக்க மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா இன்று விமர்சையாக கொண்டாடப்படுகின்றது.

மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தலைமையில் தற்போது கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படுகின்றது.

கொழும்பு பேராயர் பேருட்திரு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, காலி – அனுராதபுரம் மறை மாவட்டங்களின் ஆயர்களும் இணைந்து கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுத்து வருவதாக செட்டிக்குளம் திருத்தல அருட்தந்தை அலெக்ஸாண்டர் சில்வா பெனோ குறிப்பிடுகின்றார்.

கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மடு திருவிழாவின் நவநாள் ஆராதனைகளும், திவ்யநற்கருணை ஆராதனையும் நேற்றுடன் நிறைவடைந்தன.

மடுமாதா திருவிழாவில் கலந்துகொள்வதற்காக சுமார் ஐந்து இலட்சம் அடியார்கள் வருகை தந்துள்ளதாக மடு ஆலய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அடியாளர்களின் நலன்கருதி போக்குவரத்து, குடிநீர், சுகாதாரம், உணவு உள்ளிட்ட சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்