நியூஸ்பெஸ்டின் ஊடகத்துறை சார் பயிற்சிப் பட்டறை ஹமீட் அல் ஹூசைனி கல்லூரியில்(video)

நியூஸ்பெஸ்டின் ஊடகத்துறை சார் பயிற்சிப் பட்டறை ஹமீட் அல் ஹூசைனி கல்லூரியில்(video)

எழுத்தாளர் Staff Writer

15 Aug, 2014 | 7:37 pm

பாடசாலை மாணவர்களின் ஊடகத்துறை சார் அறிவை மேம்படுத்தும் நோக்கில் நியூஸ்பெஸ்ட் நடாத்தும் பயிற்சிப் பட்டறையின் மற்றுமொரு கட்டம் இன்று நடைபெற்றது.

கொழும்பு – 12 ஹமீட் அல் ஹூசைனி கல்லூரியில் நடைபெற்ற இந்தப் பயிற்சிப் பட்டறையில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

கொழும்பு மாநகர மத்தியில் அமைந்துள்ள 125 வருட கால வரலாற்றைக் கொண்ட ஹமீட் அல் ஹூசைனி கல்லூரிக்கு இன்றுக் காலை சென்ற நியூஸ்பெஸ்ட் குழுவிற்கு மிகுந்த வரவேற்பளிக்கப்பட்டது.

ஊடக நிறுவனங்களின் அன்றாட செயற்பாடுகள் தொடர்பிலும் செய்தி தயாரிப்பு மற்றும் ஔிபரப்பு தொடர்பிலும் தகவல்களை அறிந்து கொள்ளும் நோக்கில் மாணவர்கள் இந்தப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டனர்.

சுமார் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றனர்.

தகவல் பரிமாற்றும், செய்தி ஔி, ஒலிபரப்பு மற்றும் நவீன உலகின் பல்வேறு புதிய தொழில் நுட்ப விடயங்கள் தொடர்பில் மாணவர்களுக்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

சுமார் மூன்று மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சிப் பட்டறையின் போது தலைமைத்துவம், கூட்டு முயற்சி போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து மாணவர்களுக்கு விசேட பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.

இன்றைய பாடசாலை மாணவர்களுக்கு நாளை ஊடகத்துறையில் உள்ள வாய்ப்புக்கள் தொடர்பிலும் நியூஸ்பெஸ்ட் குழுவினால் விளக்கமளிக்கப்பட்டது.

நியூஸ்பெஸ்ட் இந்த முயற்சியைப் பாராட்டி ஹமீட் அல் ஹூசைனி கல்லூரியினால் நினைவுச் சின்னமொன்றும் வழங்கப்பட்டது.

நியூஸ்பெஸ்ட் இதற்கு முன்னர் திருகோணமலை, யாழ்ப்பாணம், இரக்குவானை, பண்டாரவளை, யட்டியாந்தோட்டை போன்ற பகுதிகளில் தமிழ் மொழி மூலம் இந்தப் பயிற்சிப் பட்டறையை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்