தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து இந்திய மீனவர்களும் விடுதலை

தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து இந்திய மீனவர்களும் விடுதலை

தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து இந்திய மீனவர்களும் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

15 Aug, 2014 | 2:31 pm

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 20 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மடு சுற்றுலா நீதிமன்றத்தின் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் இன்று ஆஜர்செய்யப்பட்டதை அடுத்தே இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் கடற்பரப்பினுள் மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த மாதம் 22 ஆம் திகதி 4 படகுகளுடன் 20 இந்திய மீனவர்களும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இந்தியாவின் 68 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நல்லெண்ண சமிக்ஙையை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு நேற்று முன்தினம் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியிருந்தார்.

இதற்கமைய இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கான பணிப்புரைக் கடிதம் சட்ட மாஅதிபர் திணைக்களத்தினால் கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து நீதிமன்றத்தின் ஊடாக இந்திய மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 74 இந்திய மீனவர்கள், ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு நீதமன்றங்களினால் நேற்று விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் அனைவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்