கிளிநொச்சியில் வாகன விபத்து; ஒருவர் காயம்

கிளிநொச்சியில் வாகன விபத்து; ஒருவர் காயம்

கிளிநொச்சியில் வாகன விபத்து; ஒருவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

15 Aug, 2014 | 10:48 am

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் கிளிநொச்சி  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி வட்டக்கரச்சி பகுதியில் நேற்று மாலை காரொன்று மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

விபத்து தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

வட மாகாண பிரதம செயலாளர் பயணித்த கார் இந்த விபத்துடன் தொடர்புபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்