மாயமான மலேசிய விமான பயணிகளின் வங்கி கணக்கில் இருந்து பணம் கொள்ளை

மாயமான மலேசிய விமான பயணிகளின் வங்கி கணக்கில் இருந்து பணம் கொள்ளை

மாயமான மலேசிய விமான பயணிகளின் வங்கி கணக்கில் இருந்து பணம் கொள்ளை

எழுத்தாளர் Staff Writer

15 Aug, 2014 | 12:43 pm

மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.எச்- 370 என்ற விமானம் கடந்த மார்ச் 8 ஆம் திகதி மாயமானது.  கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு செல்லும்  வழியில் இந்த விமானம் மாயமானது.

இந்த விமானத்தில் சென்ற பயணிகள் அனைவரும் இறந்து விட்டார்கள் என்று அறிவித்து மலேசிய அரசு அவர்களுக்கான இழப்பீட்டு தொகையை அவர்களது குடும்பத்திற்கு வழங்கி விட்டது.

இந்த விமானத்தின் பாகங்களை தேடும் பணியில் ஆவுஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.விமானம் மாயமாகி 5 மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த வித தகவலும் கிடைக்கவில்லை

இந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்த 4 பயணிகளின் வங்கி கணக்கில் இருந்து ஏ.டி.எம் மூலம்  34,890 அமெரிக்க டொலர்கள் எடுக்கபட்டு உள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளதாக மலேசிய பொருளாதார குற்ற பிரிவு பொலிஸ் அதிகாரி  அஷானி அப்துல் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும் போது. இந்த விவரம்  வங்கியின் கணக்கு வழக்குகளை சரிபார்க்கும் போது தெரிய வந்ததாக உள்ளூர் வங்கி முகாமையாளர் தெரிவித்து உள்ளார்.

நாங்கள் சி.சி.டிவியில் பதிவான விவரங்களை கொண்டு  இதில் சந்தேகபடும் படியான நபர்களின் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்