கஹதுட்டுவயில் வாகன விபத்து; தாயும் மகளும் உயிரிழப்பு

கஹதுட்டுவயில் வாகன விபத்து; தாயும் மகளும் உயிரிழப்பு

கஹதுட்டுவயில் வாகன விபத்து; தாயும் மகளும் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Aug, 2014 | 7:09 pm

கஹதுட்டுவ பகுதியில் லொறி மோதியதில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

இன்று மாலை இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் வெதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மாத்தளை நாஉல உடதெனிய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 30  பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் நாஉல நாலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் மோதி இன்று மாலை விபத்து இடம்பெற்றுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்