கட்டுகஸ்தோட்டையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் கைது

கட்டுகஸ்தோட்டையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் கைது

கட்டுகஸ்தோட்டையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

15 Aug, 2014 | 11:44 am

59 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கட்டுகஸ்தோட்டை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினால் இந்த நான்கு சந்தேகநபர்களும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்.

சந்தேகநபர்களில் பெண் ஒருவரும் அடங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

இதுதவிர சந்தேகநபர்கள் பயன்படுத்திய கெப் வாகனமொன்றும், காரொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக பொலிஸார் சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்