கடற்படை வீரரால் பெண் மீது வல்லுறவு முயற்சி; கிளிநொச்சியில் சம்பவம்

கடற்படை வீரரால் பெண் மீது வல்லுறவு முயற்சி; கிளிநொச்சியில் சம்பவம்

கடற்படை வீரரால் பெண் மீது வல்லுறவு முயற்சி; கிளிநொச்சியில் சம்பவம்

எழுத்தாளர் Staff Writer

15 Aug, 2014 | 10:59 am

கிளிநொச்சி பளையில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த கடற்படை வீரர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் நேற்று பிற்பகல் ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

பளை பகுதியில் இரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்