ஈரான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி இரங்கல்!

ஈரான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி இரங்கல்!

ஈரான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி இரங்கல்!

எழுத்தாளர் Staff Writer

15 Aug, 2014 | 6:51 pm

ஈரான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

ஈரான் ஜனாதிபதி கலாநிதி ஹசன் றௌஹானிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமது அனுதாப செய்தியை தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விமான விபத்தில் இழப்புக்களை சந்தித்துள்ள குடும்பங்களுக்கான ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதிலும் , விமான விபத்தில் காயமடைந்வர்கள் விரைவில் குணமடைவதற்கான பிராத்தனைகளிலும்  இலங்கை அரசாங்கமும், மக்களும் தன்னோடு இணைந்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்