இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவு; வலுவான நிலையில் இலங்கை

இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவு; வலுவான நிலையில் இலங்கை

இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவு; வலுவான நிலையில் இலங்கை

எழுத்தாளர் Staff Writer

15 Aug, 2014 | 6:18 pm

ரங்கன ஹேரத்தின் துல்லியமான பந்துவீச்சின் காரணமாக இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.

போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை பெற்ற 320 ஓட்டங்களுக்கு பதிலளித்தாடும் பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்புக்கு 244 ஓட்டங்களை இன்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பெற்றிருந்தது.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் 8 விக்கெட் இழப்புக்கு 261 ஓட்டங்களுடன்
இலங்கை அதன் முதல் இன்னிங்ஸை இன்று தொடர்ந்தது.

தம்மிக பிரசாத் 4 ஓட்டங்களுடனும், ரங்கன ஹேரத் ஓட்டமின்றியும் இன்றைய ஆட்டத்தை ஆரம்பித்தனர்.

மேலும் 23 ஓட்டங்கள் பகிரப்பட்ட நிலையில் தம்மிக பிரசாத்
13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ரங்கன ஹேரத் மற்றும் ச்சானக வெலகெதர ஜோடி கடைசி விக்கெட்டில் 36 ஓட்டங்களைப் பகிர்ந்தது.

ரங்கன ஹேரத் 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க ச்சானக வெலகெதர 27 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.

இலங்கை அணி 320 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பந்துவீச்சில் ஜூனைட் கான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இது டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அவர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஐந்தாவது சந்தர்ப்பமாகும்.

இதேவேளை, ஓய்வுபெறும் டெஸ்ட் போட்டியில் விளையாடும் மஹெல ஜயவர்தன களத்தடுப்புக்காக களமிறங்கிய போது அவருக்கு இளம் வீரர்களால் வரவேற்பளிக்கப்பட்டது.

பாகிஸ்தான் சார்பாக குரம் மன்சூர் மற்றும் அஹமட் ஷெஷாட் ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர்.

47 ஓட்டங்கள் பகிரப்பட்ட நிலையில் முதல் விக்கெட்டாக
குரம் மன்சூர் 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய அஹமட் ஷெஷாட் தனது இரண்டாவது டெஸ்ட் அரைச்சதத்தைக் கடந்தார்.

அசார் அலி 32 ஓட்டங்களையும், அஹமட் ஷெஷாட் 58 ஓட்டங்களையும் பெற்றனர்.

யூனுஸ் கான், அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 140 ஓட்டங்களுக்கு ஐந்தாவது விக்கெட்டை இழந்தது.

எனினும், சப்ராஸ் அஹமட் மற்றும் அசாத் ஷாபிக் ஜோடி 93 ஓட்டங்களைப் பகிர்ந்து  ஆறுதல் அளித்தது.

சப்ராஸ் அஹமட் தனது நான்காவது டெஸ்ட் அரைச்சதத்தைக் கடந்தார்.

அசாத் ஷாபிக் 42 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

சப்ராஸ் அஹமட் 66 ஓட்டங்களுடனும், அப்துர் ரெஹ்மான் ஓர் ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இது டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் ரங்கன ஹேரத் 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய 20 ஆவது சந்தர்ப்பமாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்