ஸ்பெயின் கடற்பரப்பில் 755 சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்கள்

ஸ்பெயின் கடற்பரப்பில் 755 சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்கள்

ஸ்பெயின் கடற்பரப்பில் 755 சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்கள்

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2014 | 3:36 pm

ஸ்பெயின் கடற்பரப்பில் 755 சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

டரிபியா பகுதியில் மீட்கப்பட்டவர்களில் 640 பேர் ஆண்களும் 95 பெண்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடக்கு ஆபிரிக்க பகுதியிலிருந்து புகலிடம் கோரி வந்துள்ள குறித்த மக்கள் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஸ்பெயின் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் சுமார் 300 பேர் குறித்த கடற்பகுதியில் மீட்கப்பட்டதை அடுத்து நேற்றைய தினமும் 750 பேர் மீட்கப்பட்டதனால் கடற்பிராந்தியத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்