மோசமான படங்களுக்கும் இசையமைப்பேன் – இளையராஜா

மோசமான படங்களுக்கும் இசையமைப்பேன் – இளையராஜா

மோசமான படங்களுக்கும் இசையமைப்பேன் – இளையராஜா

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2014 | 12:15 pm

”ஒரு படம் எத்தனை மோசமாக இருந்தாலும், எனக்குப் பிடிக்காவிட்டாலும், என் தொழிலுக்கு துரோகம் செய்யாமல் சிறப்பான இசையையே தருவேன்”, எனக் குறிப்பிட்டுள்ளார் இசைஞானி இளையராஜா.

சுப்ரமணியம் சிவாவிடம் உதவியாளராக பணியாற்றிய கார்த்திக் ரிஷி இயக்கியிருக்கும் புதிய படம் ‘மேகா’. அஷ்வின் – ஸ்ருஷ்டி ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது இசைஞானி இளையராஜா பங்கேற்றார். அப்போது இந்தப் படத்துக்காக அவர் ஹங்கேரி சென்று இசையமைத்ததன் வீடியோ காட்சிகளை திரையிட்டுக் காட்டினர்.

இளையராஜா பேசுகையில், ”பாரதிராஜாவோட முதல் மரியாதை படம். பின்னணி இசைக்காக எனக்கு முதல் முறையாக போட்டுக் காட்டினார்கள். படம் பார்த்தேன். எனக்குப் பிடிக்கல. பாரதி கேட்டார்.. நான் ஒன்றும் சொல்லாமல் கிளம்பிவிட்டேன். ‘சரி அவனுக்கு படம் பிடிக்கல..’ என்று உடனிருந்தவர்களிடம் சொன்னார்.

அடுத்த நாள் பின்னணி இசையமைக்க ஆரம்பித்தேன். கடைசி ரீல்.. அதில் ராதா சிறைக்குள் இருக்கும் காட்சி. சிவாஜி வருவார்.. ராதா அவரைப் பார்க்க வருவார். அந்தக் காட்சிக்கான பின்னணி இசையைக் கேட்டதும், பாரதி ராஜா கண்ணீர் விட்டு அழுதுவிட்டார். ‘உனக்குப் பிடிக்காத படத்துக்கே இப்படி இசையமைச்சிருக்கியேடா’ என்று அழுத்தார்.

அது எத்தனை நல்ல படமாக, மோசமான படமாக இருந்தாலும், எனக்குப் பிடிச்சிருந்தாலும் பிடிக்காவிட்டாலும், தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நல்ல இசையைத்தான் தருகிறேன். என் தொழிலுக்கு, என் சரஸ்வதிக்கு, சப்தஸ்வரங்களுக்கு துரோகம் செய்யமாட்டேன்.

நீங்கள் தூ என்று துப்பும் படத்தைக் கூட நான் நான்கு முறை பார்க்கிறேன். சலித்துக் கொண்டதில்லை. காரணம் அது என் தொழில்”. என குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்