மட்டக்களப்பில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம்; விசாரணைக்கு விசேட குழு (Photos)

மட்டக்களப்பில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம்; விசாரணைக்கு விசேட குழு (Photos)

மட்டக்களப்பில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம்; விசாரணைக்கு விசேட குழு (Photos)

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2014 | 2:29 pm

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையே ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையிலான குழு இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மதுபான விற்பனை நிலையமொன்றை சுற்றிவளைக்க முயன்ற பொலிஸாருக்கும் அங்கிருந்த மக்களுக்கும் இடையே நேற்று மாலை அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரை கைது செய்ததை அடுத்து அங்கிருந்தவர்கள் பொலிஸாருக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் அவரது உறவினர்கள் இதன்போது பொலிஸார் மீது தாக்குதல் நடத்தி கெப் வாகனத்திற்கு தீ வைத்ததாக பொலிஸ் ஊடகப் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் காயமடைந்த ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களும், பெண் பொலிஸ் கான்ஸ்ரபிளும் கொக்கட்டிச்சோலை மற்றும் மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேகநபரான பெண் மற்றும் அவரது மகள் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபரான பெண் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்று வருகின்றார்.

இந்த சம்பவத்தை அடுத்து கொக்கட்டிச்சோலை பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொலிஸார்மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

batticaloa incident 2 batticaloa incident 1 batticaloa incident
Photos :- U-Reporter – Udayakanth – Batticaloa


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்