மட்டக்களப்பில் தாக்குதல்; பொலிஸார் 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பில் தாக்குதல்; பொலிஸார் 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பில் தாக்குதல்; பொலிஸார் 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2014 | 9:10 am

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை நிலையமொன்றை சுற்றிவளைத்த பொலிஸாருக்கும் அங்கிருந்த மக்களுக்கும் இடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்தே இந்த அமைதியின்மை ஏற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று நேற்று பிற்பகல் சுற்றிவளைப்புக்காக சென்றிருந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்கு அங்கு கூடியிருந்தவர்கள் எதிர்ப்பை வெளியிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது பெண் பொலிஸ் கான்ஸ்ரபிள் உள்ளிட்ட மற்றுமொரு குழுவொன்றும் கெப் வாகனத்தில் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் அவரது உறவினர்கள் இதன்போது பொலிஸார் மீது தாக்குதல் நடத்தி கெப் வாகனத்திற்கு தீ வைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் காயமடைந்த 7 பொலிஸ் உத்தியோகத்தர்களும், பெண் பொலிஸ் கான்ஸ்ரபிளும் கொக்கட்டிச்சோலை மற்றும் மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோதலின் போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேகநபரான பெண் மற்றும் அவரது மகள் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்