தென்னாபிரிக்கா இலகு வெற்றி

தென்னாபிரிக்கா இலகு வெற்றி

தென்னாபிரிக்கா இலகு வெற்றி

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2014 | 12:41 pm

ஸிம்பாவ்பே அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 9 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

ஹராரோ மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 41 ஓட்டங்களை வெற்றியிலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி ஒரு விக்கட்டினை இழந்து வெற்றியிலக்கை கடந்தது.

நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று தனது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாவ்பே அணி 256 ஓட்டங்களையும் தென்னாபிரிக்க அணி 397 ஓட்டஙகளையும் பெற்றது.

தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாவ்பே அணி தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களின் சிறப்பாக பந்துவீச்சினால் 181 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தமை குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளுக்கும் இடையில் ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்