திருகோணமலையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஐவர் கைது

திருகோணமலையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஐவர் கைது

திருகோணமலையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஐவர் கைது

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2014 | 11:21 am

திருகோணமலை சலப்பையாறு பகுதியில் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவில் அண்மைக்காலமாக சட்டவிரோத மதுபான விற்பனை அதிகரித்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதற்கமைய குச்சவெளி பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சட்டவிரோத மதுபான போத்தல்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்