காருடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி

காருடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி

காருடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2014 | 1:38 pm

சிலாபம் கொழும்பு பிரதான வீதியின் மாரவில பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

தமது கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த 62 வயதான பெண்ணே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர் மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்