இலங்கையில் காணாமற்போன பிள்ளையை தேடிப் பார்க்கும் உரிமை தாய்க்கு இல்லை – அசாத் சாலி (Video)

இலங்கையில் காணாமற்போன பிள்ளையை தேடிப் பார்க்கும் உரிமை தாய்க்கு இல்லை – அசாத் சாலி (Video)

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2014 | 9:30 am

காணாமல் போனோரின் உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்காக அண்மையில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாடொன்றிற்கு இடையூறு விளைவிக்கப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கொழும்பில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது.

இதுபோன்ற சம்பவங்களால் இலங்கையின் அரசியலமைப்பு மீறப்படுவதாக இந்த சந்திப்பின்போது சட்டத்தரணி நிமல்கா பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தரணி நிமல்கா பெணான்டோ:-
அது போன்ற செயற்பாடுகள் மிகவும் கீழ்த்தரமாக உள்ளன. இலங்கையின் அரசியலமைப்பு மீறப்படுகின்றது. நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி, மக்களை முட்டாள்களாக்கி, ஆட்சி செய்கின்ற ரெஜிமண்டுக்கு எதிராக செயற்பட வேண்டும். காணாமல் போனோரின் குடும்பங்களிலுள்ள மக்களின் ஜனநாயக உரிமைக்காக நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். எந்த ஆட்சியாளர் வந்தாலும் பரவாயில்லை

காணாமல்போன தமது பிள்ளைகளைத் தேடிப்பார்க்கும் உரிமைகூட அந்த பிள்ளைகளின் பெற்றோருக்கு இன்று கிடையாதென தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.

அசாத் சாலி :-
பிள்ளை காணாமல் போனால், அந்த பிள்ளை எங்கே என தேடி பார்க்க தாய்க்கு உரிமை இல்லையா? உயிரிழந்திருந்தால், இந்த அரசாங்கத்திற்கு மரண சான்றிதழை வழங்க முடியாதா? இருக்கின்றாரா? இல்லையா என்று அம்மாவிற்கு கூறுவதில்லை.  தாய்க்கு அந்த உரிமை கூட கிடையாது. என்ன இந்த ரெஜிமண்ட்டின் வேலைதிட்டம் இது. இந்த காடையர்களை வைத்து கொண்டு தமது அரசாங்கத்தை நிர்வகிக்கின்றனர். அங்கே கூட்டமொன்று நடைபெறுகின்றது, மற்றுமொரு இடத்தில் பாக்கிசோதி கூட்டமொன்றை நாடத்துகின்றார். என்.ஜி.ஓ காக்கைகள். அந்த இடங்களுக்கு செல்லுமாறு ஒப்பந்தம் வழங்குகின்றனர். சர்வதேசத்திற்கு சென்று இந்த நாடு தொடர்பில் புறம் பேசுமாறு கூறுவது யார்?

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து கருத்து தெரிவிக்கையில்

பாக்கியசோதி சரவணமுத்து:-
சிவில் அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளதாக கூறுகின்றனர். போதும் என்று கூறுவது போதும். இந்த நாட்டை வீணடிக்கின்றனர். அதாவது சட்ட ஆதிக்கம் வீழ்ச்சி கண்டுள்ளது. அல்லது அது செயலிழந்துள்ளது என்றே கூற வேண்டும். இதற்கு எதிராக அனைத்து சந்தர்ப்பங்களிலும் முன்னின்று செயற்பட வேண்டும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்