இபோலா தொற்றுக்கான மருந்துகளை பரீட்சித்து பார்க்க அனுமதி

இபோலா தொற்றுக்கான மருந்துகளை பரீட்சித்து பார்க்க அனுமதி

இபோலா தொற்றுக்கான மருந்துகளை பரீட்சித்து பார்க்க அனுமதி

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2014 | 3:48 pm

வட ஆபிரிக்காவில் பரவி வரும் இபோலா தொற்றுக்கான பரிசோதனை மருந்துகளை பரீட்சித்து பார்ப்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளது.

இதுவரை ஆபிரிக்க நாடுகளில் மாத்திரமே காணப்பட்ட இந்த தொற்றானது ஐரோப்பிய நாடுகளிலும் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கு ஆபிரிக்காவில் பணியாற்றிய மதகுரு ஒருவர் ஸ்பெயின் தலைநகர் மெட்ரிட்டிலுள்ள வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக நேற்று செய்திகள் வெளிவந்தன.

இதுவரை இந்த தொற்றினால் 1,013 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தொற்றிற்கான சொட்டு மருந்துகளை வழங்குவதற்கு கனடா முன்வந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் இதுவரை இதற்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்’தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்