அகில இலங்கை சுவசேவா சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு

அகில இலங்கை சுவசேவா சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு

அகில இலங்கை சுவசேவா சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2014 | 2:56 pm

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அகில இலங்கை சுவசேவா சங்கம் முன்னெடுத்துவரும் அடையாள பணிப்பகிஷ்கரிப்பினால் நோயாளர்கள் இன்று காலை முதல் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

நிலுவை சம்பளத்தை வழங்குதல், ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட அடையாள பணிப்பகிஷ்கரிப்பு 24 மணித்தியாலங்களுக்கு தொடரும் என அகில இலங்கை சுவசேவா சங்கத்தின் தலைவர் டி.விஜயலால் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கிவருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அகில இலங்கை சுவசேவா சங்கம் அநீதியான முறையில் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பிரதி சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்