கையடக்க தொலைபேசி இணைப்புக்களை அனைத்தையும் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தல்

கையடக்க தொலைபேசி இணைப்புக்களை அனைத்தையும் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தல்

கையடக்க தொலைபேசி இணைப்புக்களை அனைத்தையும் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

11 Aug, 2014 | 2:00 pm

கையடக்க தொலைபேசி இணைப்புக்களை பதிவு செய்வதற்காக தொலைபேசி நிறுவனங்களுக்கு இந்த வருட இறுதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தொலை தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புதிதாக வழங்கப்படுகின்ற கையடக்க தொலைபேசி இணைப்புக்கள் அனைத்தையும் பதிவு செய்யுமாறு தொலைபேசி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை காலமும் பதிவு செய்யப்படாதுள்ள இணைப்புக்களையும் உடனடியாக பதிவு செய்யுமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக  அவர் கூறியுள்ளார்

கையடக்கத் தொலைபேசி இணைப்புக்களை பதிவு செய்யத் தவறும் நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தொலை தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

நாட்டிலுள்ள கையடக்க தொலைபேசி இணைப்புக்களில் 70 தொடக்கம் 80 வீதமானவை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் 21 தசம் ஆறு மில்லியன் கையடக்கத் தொலைபேசி இணைப்புக்கள் பாயன்பாட்டில்  உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்