மன்னாரில் காணாமற்போனோர் தொடர்பில் 46 பேர் சாட்சியம்

மன்னாரில் காணாமற்போனோர் தொடர்பில் 46 பேர் சாட்சியம்

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2014 | 8:09 pm

மன்னார் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் இன்று 46 பேர் சாட்சியமளித்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்திற்கான மூன்றாம் நாளுக்குரிய அமர்வுக்கு 60பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ குணதாஸ தெரிவித்தார்.

அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் 46 பேர் சாட்சியமளிப்பதற்கு வருகைதந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, 90 பேரிடம் புதிய முறைப்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ஆணைக்குழுவினால் கடந்த இரண்டு நாட்களாக மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட சாட்சி விசாரணைகளில் 83 பேரிடம் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மன்னார் மாவட்டத்திற்கான நான்காம் நாளுக்கான அமர்வுகள் மடு பிரதேச செயலகத்தில் நாளை நடைபெறவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்