பசறை மோதல் தொடர்பில் ஒன்பது சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்

பசறை மோதல் தொடர்பில் ஒன்பது சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்

பசறை மோதல் தொடர்பில் ஒன்பது சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2014 | 2:57 pm

பசறை கோணகலை தோட்டத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் ஒன்பது சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனினும் சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அடையாளம் காணப்பட்டுள்ளவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழு சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித்ரோஹண தெரிவித்துள்ளார்.

மோதலின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தின் பின்னர் கோனகலை தோட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோணகலை தோட்டத்தில் இரு தரப்பினரிடையே நேற்று மாலை ஏட்பட்ட மோதலில் காயமடைந்த நால்வர் பதுளை பொது  வைத்தியசாலையில் அனுமதிக்க்பட்டுள்ளனர்.

தோட்டத்தில் இடம்பெற்ற மோதலை கட்டுப்படுத்தும் முயற்சியின் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதன்போது பொது மக்கள் நடத்திய தாக்குதலில்  மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்தனர்.

தோட்டத்திலுள்ள ஆலயம் ஒன்றின் புதிய நிர்வாகம் நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுவடைந்தமையே மோதல் ஏற்படுவதற்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்