பசறை மோதல்; காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றம்

பசறை மோதல்; காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றம்

பசறை மோதல்; காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றம்

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2014 | 9:13 am

பசறை கோணகலை தோட்டத்தில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த நால்வர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது  வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தோட்டத்திலுள்ள ஆலயம் ஒன்றின் புதிய நிர்வாகம் நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுவடைந்தமையே மோதல் ஏற்படுவதற்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கோணகலை தோட்டத்தில் நேற்று மாலை இடம்பெற்ற மோதலை கட்டுப்படுத்தும் முயற்சியின் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதன்போது பொது மக்கள் நடத்திய தாக்குதலில்  மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பில்  பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்