நாவலப்பிட்டி பிரதேசத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பதற்கு காரணமான சிறுத்தை சிறைபிடிப்பு

நாவலப்பிட்டி பிரதேசத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பதற்கு காரணமான சிறுத்தை சிறைபிடிப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2014 | 10:11 pm

நாவலப்பிட்டி பிரதேசத்தில் பெண் ஒருவரை தாக்கி கொன்ற சிறுத்தையை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பிடித்துள்ளனர்.

பின்னர் அந்த சிறுத்தையை தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒப்படைத்ததாக திணைக்களம் தெரிவித்தது.

நாவலப்பிட்டி பிரதேசத்தில் தோட்டப் புறமொன்றில் நேற்று இரவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சிறுத்தையை பிடிக்க முடிந்தாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

சுமார் ஏழு வயது நிரம்பிய சிறுத்தை, தேக ஆரோக்கியத்துடன் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மீண்டும் அந்த சிறுத்தையை வனப் பகுதியில் விடுவித்தால், மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதனால் தற்காலிகமாக அதனை தெஹிவளை மிருகக் காட்சிசாலைக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.டீ.ரத்நாயக்க கூறினார்.

நாவலப்பிட்டி, பார்கேபல் பிரதேசத்தில் கடந்த மாதம் 16ஆம் திகதி இந்த சிறுத்தை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்