நக்கிள்ஸ் காட்டில் தீ; 200 ஏக்கர் வனப்பிரதேசம் சேதம்

நக்கிள்ஸ் காட்டில் தீ; 200 ஏக்கர் வனப்பிரதேசம் சேதம்

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2014 | 9:20 pm

ஹுன்னஸ்கிரிய நக்கிள்ஸ் காட்டுப்பகுதியில் பரவிய தீயை அணைப்பதற்கு விமானப் படையின் ஹெலிகொப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இதற்காக இரத்மலானை விமானப் படை முகாமில் இருந்து ஹெலிகொப்டர் அனுப்பிவைக்கப்பட்டதாக விமானப் படையின் பேச்சாளர் வின்ங் கொமான்டர் கிஹான் செனவிரத்ன குறிப்பிட்டார்.

நக்கிள்ஸ் காட்டுப்பகுதியில் இன்று காலை பரவிய தீயினால் 200 ஏக்கர் பகுதி சேதமடைந்துள்ளது.

தீயணைப்பு பணிகளில் இராணுவத்தினரின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்