தென்மராட்சி கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் முழுநிலா நாள் கலை விழா

தென்மராட்சி கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் முழுநிலா நாள் கலை விழா

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2014 | 9:52 pm

வட மாகாண கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி கல்வி வலயம் நடாத்திய “முழுநிலா நாள் கலை விழா”  இன்று சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற  இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலந்துகொண்டார்.

நிகழ்வில், பேராசிரியர் க.அருணாசலம் சான்றோர் கௌரவத்தினைப் பெற்றார்.

இந்நிகழ்வில். பல்வேறு பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்