கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கிணற்றிலிருந்து ஆயுதங்கள் சில மீட்பு

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கிணற்றிலிருந்து ஆயுதங்கள் சில மீட்பு

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கிணற்றிலிருந்து ஆயுதங்கள் சில மீட்பு

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2014 | 2:00 pm

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியிலுள்ள பாடசாலையின் கிணற்றிலிருந்து ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போது இன்று முற்பகல் 10.30 அளவில் ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்டுள்ள ஆயுதங்களை கிளிநொச்சி தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பழைய துப்பாக்கி பாகங்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்