கந்தப்பளையில் வர்த்தக நிலையத்தில் கொள்ளை

கந்தப்பளையில் வர்த்தக நிலையத்தில் கொள்ளை

கந்தப்பளையில் வர்த்தக நிலையத்தில் கொள்ளை

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2014 | 8:24 pm

நுவரெலியா – கந்தப்பளையில் விற்பனை நிலையம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விற்பனை நிலையத்தின் கூரையினை உடைத்து, நேற்றிரவு கொள்ளையர்கள் உட்புகுந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கிருமி நாசினி வகைகள் உட்பட விவசாயப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

திருடப்பட்ட பொருட்களின் பெறுமதி 80 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமென  பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கந்தப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்