ஊவா தேர்தல்; தபால் மூலம் வாக்களிப்பதற்கு 41,867 பேர் விண்ணப்பம்

ஊவா தேர்தல்; தபால் மூலம் வாக்களிப்பதற்கு 41,867 பேர் விண்ணப்பம்

ஊவா தேர்தல்; தபால் மூலம் வாக்களிப்பதற்கு 41,867 பேர் விண்ணப்பம்

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2014 | 1:41 pm

ஊவா மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 41,867 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

கிடைத்துள்ள விண்ணப்பங்கள் குறித்து பரீசிலனை செய்து வருவதாக தேர்தல் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

இதன்பிரகாரம் பதுளை மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 25,870 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மொனராகலை மாவட்டத்தில் 15,997 தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விண்ணப்பங்கள் பரீசிலனை செய்யப்பட்டு , எதிர்வரும் தினங்களில் தபால்மூலம் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளவர்களின் விபரங்கள் வெளியிடப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்