இலங்கை 7 விக்கெட்டுகளால் அபார வெற்றி

இலங்கை 7 விக்கெட்டுகளால் அபார வெற்றி

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2014 | 5:56 pm

இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் 99 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை அடைந்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் மஹேல ஜயவர்தன 26 ஓட்டங்களையும், அஞ்சலோ மெத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்த போட்டியில் தனது முதல் இனிங்ஸில், பாகிஸ்தான் 451 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது, இலங்கை 9 விக்கெட்டுகளை இழந்து 533 ஓட்டங்களைப்பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.

பாகிஸ்தான் தனது இரண்டாவது இனிங்ஸில் 180 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது, இந்நிலையில் 99 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கு இலங்கை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக ரங்கன ஹேரத் தெரிவானார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்