இந்திய மீனவர்களை இலங்கை விடுதலை செய்யாவிடின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் – இராமேஸ்வரம் மீனவர்கள்

இந்திய மீனவர்களை இலங்கை விடுதலை செய்யாவிடின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் – இராமேஸ்வரம் மீனவர்கள்

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2014 | 8:18 pm

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் எதிர்வரும் 02 தினங்களுக்குள் விடுதலை செய்யப்படாவிடின், சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், கைதான 94 இந்திய மீனவர்களும், 63 படகுகளும் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி, கடந்த மாதம் 24 ஆம் திகதிமுதல் இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் அடுத்தகட்டமாக, கச்சத்தீவுக்கு சென்று தஞ்சமடையும் போராட்டம் மத்திய அமைச்சின் உறுதிமொழியை அடுத்து கைவிடப்பட்டிருந்தது.

ஆயினும், இந்திய மீனவர்களை விடுதலை செய்வதற்கு இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், 13 ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவதற்கு ராமேஸ்வரம் மீனவர்கள் தீர்மானித்துள்ளதாக இந்தியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்